முகப்பு |
கங்குல் வெள்ளத்தார் |
387. முல்லை |
எல்லை கழிய, முல்லை மலர, |
||
கதிர் சினம் தணிந்த கையறு மாலை, |
||
உயிர் வரம்பாக நீந்தினம் ஆயின், |
||
எவன்கொல் வாழி?-தோழி!- |
||
கங்குல் வெள்ளம் கடலினும் பெரிதே! |
உரை | |
பிரிவிடை வற்புறுத்தும் தோழிக்குக் கிழத்தி வன்புறை எதிர் அழிந்து கூறியது.- கங்குல் வெள்ளத்தார் |