முகப்பு |
கச்சிப்பேட்டுக் காஞ்சிக் கொற்றன் |
213. பாலை |
நசை நன்கு உடையர்-தோழி!-ஞெரேரெனக் |
||
கவைத் தலை முது கலை காலின் ஒற்றிப் |
||
பசிப் பிணிக்கு இறைஞ்சிய பரூஉப் பெருந் ததரல் |
||
ஒழியின் உண்டு, அழிவு இல் நெஞ்சின் |
||
தெறித்து நடை மரபின் தன் மறிக்கு நிழல் ஆகி, |
||
நின்று வெயில் கழிக்கும் என்ப-நம் |
||
இன் துயில் முனிநர் சென்ற ஆறே. |
உரை | |
'நம்பெருமான் நம்பொருட்டு இடைநின்று மீள்வான்' எனக் கவன்ற தலைமகட்குத் தோழி உரைத்தது. - கச்சிப் பேட்டுக் காஞ்சிக் கொற்றன் |
216. பாலை |
அவரே, கேடு இல் விழுப்பொருள் தருமார், பாசிலை |
||
வாடா வள்ளிஅம் காடு இறந்தோரே; |
||
யானே, தோடு ஆர் எல் வளை ஞெகிழ, நாளும் |
||
பாடு அமை சேக்கையில், படர் கூர்ந்திசினே; |
||
'அன்னள் அளியள்' என்னாது, மா மழை |
||
இன்னும் பெய்யும்; முழங்கி |
||
மின்னும்-தோழி!-என் இன் உயிர் குறித்தே |
உரை | |
பருவ வரவின்கண், 'ஆற்றாள்' எனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது.- கச்சிப் பேட்டுக் காஞ்சிக் கொற்றன |