முகப்பு |
கருவூர்ப் பவுத்திரன் |
162. முல்லை |
கார் புறந்தந்த நீருடை வியன் புலத்துப் |
||
பல் ஆ புகுதரூஉம் புல்லென் மாலை- |
||
முல்லை! வாழியோ, முல்லை!-நீ நின் |
||
சிறு வெண் முகையின் முறுவல் கொண்டனை; |
||
நகுவை போலக் காட்டல் |
||
தகுமோ, மற்று-இது தமியோர்மாட்டே? |
உரை | |
வினை முற்றி மீளும் தலைமகன் முல்லைக்கு உரைப்பானாய் உரைத்தது.- கருவூர்ப் பவுத்திரன். |