முகப்பு |
தீன்மதிநாகன் |
111. குறிஞ்சி |
மென் தோள் நெகிழ்த்த செல்லல், வேலன், |
||
'வென்றி நெடு வேள்' என்னும்; அன்னையும், |
||
அது என உணரும்ஆயின், ஆயிடைக் |
||
கூழை இரும் பிடிக் கை கரந்தன்ன |
||
கேழ் இருந் துறுகல் கெழு மலை நாடன் |
||
வல்லே வருக-தோழி!-நம் |
||
இல்லோர் பெரு நகை காணிய சிறிதே! |
உரை | |
வரைவு நீட்டித்தவழித் தலைமகள் வேறுபாடு கண்டு வெறியெடுப்பக் கருதிய தாயது நிலைமை தலைமகட்குச் சொல்லுவாளாய், தலைவன் சிறைப்புறமாகத் தோழி கூறியது. - தீன்மதிநாகன். |