முகப்பு |
பூங்கண்ணன் |
253.பாலை |
கேளார் ஆகுவர்-தோழி!-கேட்பின், |
||
விழுமிது கழிவதுஆயினும், நெகிழ்நூல் |
||
பூச் சேர் அணையின் பெருங் கவின் தொலைந்த நின் |
||
நாள் துயர் கெடப் பின் நீடலர்மாதோ- |
||
ஒலி கழை நிவந்த ஓங்கு மலைச் சாரல், |
||
புலி புகா உறுத்த புலவு நாறு கல் அளை |
||
ஆறு செல் மாக்கள் சேக்கும் |
||
கோடு உயர் பிறங்கல் மலை இறந்தோரே. |
உரை | |
பிரிவிடைத் தோழி வற்புறுத்தியது. - பூங்கண்ணன் |