முகப்பு |
மதுரைக்கடையத்தார் மகன் வெண்ணாகன் |
223. குறிஞ்சி |
'பேர் ஊர் கொண்ட ஆர்கலி விழவில் |
||
செல்வாம் செல்வாம்' என்றி; அன்று, இவண் |
||
நல்லோர் நல்ல பலவால் தில்ல; |
||
தழலும் தட்டையும் முறியும் தந்து, 'இவை |
||
ஒத்தன நினக்கு' எனப் பொய்த்தன கூறி, |
||
அன்னை ஓம்பிய ஆய் நலம் |
||
என்னை கொண்டான்; யாம் இன்னமால் இனியே. |
உரை | |
வரைவிடை வேறுபட்ட கிழத்தியது வேறுபாடு கண்டு. வற்புறுத்தும் தோழிக்குக் கிழத்தி கூறியது. - மதுரைக் கடையத்தார் மகன் வெண்ணாகன் |