முகப்பு |
மாமிலாடன் |
46. மருதம் |
ஆம்பற் பூவின் சாம்பல் அன்ன |
||
கூம்பிய சிறகர் மனை உறை குரீஇ |
||
முன்றில் உணங்கல் மாந்தி, மன்றத்து |
||
எருவின் நுண் தாது குடைவன ஆடி, |
||
இல் இறைப் பள்ளித் தம் பிள்ளையொடு வதியும் |
||
புன்கண் மாலையும், புலம்பும், |
||
இன்றுகொல்-தோழி!-அவர் சென்ற நாட்டே? |
உரை | |
பிரிவிடை 'ஆற்றாள்' எனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி ஆற்றுவல் என்பதுபடச் சொல்லியது. - மாமிலாடன். |