முகப்பு |
மலையமான் |
198. குறிஞ்சி |
யாஅம் கொன்ற மரம் சுட்ட இயவில் |
||
கரும்பு மருள் முதல பைந் தாட் செந் தினை |
||
மடப் பிடித் தடக்கை அன்ன பால் வார்பு, |
||
கரிக் குறட்டு இறைஞ்சிய செறிக் கோட் பைங் குரல் |
||
படுகிளி கடிகம் சேறும்; அடுபோர் |
||
எஃகு விளங்கு தடக் கை மலையன் கானத்து |
||
ஆரம் நாறும் மார்பினை, |
||
வாரற்கதில்ல; வருகுவள் யாயே. | உரை | |
தோழி குறியிடம் பெயர்த்துக் கூறியது. - கபிலர் |
312. குறிஞ்சி |
இரண்டு அறி கள்வி நம் காதலோளே: |
||
முரண் கொள் துப்பின் செவ் வேல் மலையன் |
||
முள்ளூர்க் கானம் நாற வந்து, |
||
நள்ளென் கங்குல் நம் ஓரன்னள்; |
||
கூந்தல் வேய்ந்த விரவுமலர் உதிர்த்து, |
||
சாந்து உளர் நறுங் கதுப்பு எண்ணெய் நீவி, |
||
அமரா முகத்தள் ஆகித் |
||
தமர் ஓரன்னள், வைகறையானே. | உரை | |
இரவுக்குறி வந்து நீங்குகின்ற தலைமகன், தன் நெஞ்சிற்கு வரைவிடை வேட்பக் கூறியது. - கபிலர் |