முகப்பு |
அமிழ்து பொதி செந்தா |
14. குறிஞ்சி |
அமிழ்து பொதி செந் நா அஞ்ச வந்த |
||
வார்ந்து இலங்கு வை எயிற்றுச்சில் மொழி அரிவையைப் |
||
பெறுகதில் அம்ம, யானே! பெற்றாங்கு |
||
அறிகதில் அம்ம, இவ் ஊரே! மறுகில், |
||
'நல்லோள் கணவன் இவன்' எனப் |
||
பல்லோர் கூற, யாஅம் நாணுகம் சிறிதே. |
உரை | |
'மடன்மா கூறும் இடனுமார் உண்டே' என்பதனால் தோழி குறை மறுத்துழி, தலைமகன். 'மடலேறுவல்' என்பதுபடச் சொல்லியது. - தொல் கபிலர் |