முகப்பு |
ஆய் வளை ஞெகிழவும் |
316. நெய்தல் |
ஆய் வளை ஞெகிழவும், அயர்வு மெய் நிறுப்பவும், |
||
நோய் மலி வருத்தம் அன்னை அறியின், |
||
உளெனோ வாழி-தோழி!-விளியாது, |
||
உரவுக் கடல் பொருத விரவு மணல் அடைகரை |
||
ஓரை மகளிர் ஓராங்கு ஆட்ட, |
||
ஆய்ந்த அலவன் துன்புறு துனைபரி |
||
ஓங்கு வரல் விரிதிரை களையும் |
||
துறைவன் சொல்லோ பிற ஆயினவே? |
உரை | |
வரைவிடை 'வேறு படுகின்றாய்' என்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது.- தும்பி சேர் கீரன் |