முகப்பு |
இரண்டு அறி கள்வி |
312. குறிஞ்சி |
இரண்டு அறி கள்வி நம் காதலோளே: |
||
முரண் கொள் துப்பின் செவ் வேல் மலையன் |
||
முள்ளூர்க் கானம் நாற வந்து, |
||
நள்ளென் கங்குல் நம் ஓரன்னள்; |
||
கூந்தல் வேய்ந்த விரவுமலர் உதிர்த்து, |
||
சாந்து உளர் நறுங் கதுப்பு எண்ணெய் நீவி, |
||
அமரா முகத்தள் ஆகித் |
||
தமர் ஓரன்னள், வைகறையானே. |
உரை | |
இரவுக்குறி வந்து நீங்குகின்ற தலைமகன், தன் நெஞ்சிற்கு வரைவிடை வேட்பக் கூறியது. - கபிலர் |