முகப்பு |
எந்தையும் யாயும் |
374. குறிஞ்சி |
எந்தையும் யாயும் உணரக் காட்டி |
||
ஒளித்த செய்தி வெளிப்படக் கிளந்தபின், |
||
மலை கெழு வெற்பன் தலைவந்து இரப்ப, |
||
நன்று புரி கொள்கையின் ஒன்றாகின்றே- |
||
முடங்கல் இறைய தூங்கணம்குரீஇ, |
||
நீடு இரும் பெண்ணைத் தொடுத்த |
||
கூடினும் மயங்கிய மையல் ஊரே. |
உரை | |
அறத்தோடு நின்றமை தோழி கிழத்திக்கு உரைத்தது. - உறையூர்ப் பல்காயனார் |