முகப்பு |
ஓர் ஊர் வாழினும் |
231. மருதம் |
ஓர் ஊர் வாழினும் சேரி வாரார்; |
||
சேரி வரினும் ஆர முயங்கார்; |
||
ஏதிலாளர் சுடலை போலக் |
||
காணாக் கழிபமன்னே-நாண் அட்டு, |
||
நல் அறிவு இழந்த காமம் |
||
வில் உமிழ் கணையின் சென்று சேண் படவே. |
உரை | |
வாயிலாகப் புக்க தோழிக்குத் தலைமகள் சொல்லியது. - பாலை பாடிய பெருங்கடுங்கோ |