முகப்பு |
வளை வாய்ச்சிறு கிளி |
141. குறிஞ்சி |
வளை வாய்ச் சிறு கிளி விளை தினைக் கடீஇயர் |
||
செல்க என்றோளே, அன்னை' என, நீ |
||
சொல்லின் எவனோ?-தோழி!-'கொல்லை |
||
நெடுங் கை வன் மான் கடும் பகை உழந்த |
||
குறுங் கை இரும் புலிக் கொலை வல் ஏற்றை |
||
பைங் கட் செந்நாய் படுபதம் பார்க்கும் |
||
ஆர் இருள் நடு நாள் வருதி; |
||
சாரல் நாட, வாரலோ' எனவே. | உரை | |
இற்செறிக்கப்பட்டுழி இரவுக்குறி வந்தொழுகும் தலைமகற்கு வரும் ஏதம் அஞ்சி,பகற்குறி நேர்ந்த வாய்பாட்டான் அதுவும் மறுத்து, சிறைப்புறமாகத் தோழிக்குத் தலைமகள் சொல்லியது. - மதுரைப் ெ |