முகப்பு |
கவவுக் கடுங்குரையள் |
132. குறிஞ்சி |
கவவுக் கடுங்குரையள்; காமர் வனப்பினள்; |
||
குவவு மென் முலையள்; கொடிக் கூந்தலளே- |
||
யாங்கு மறந்து அமைகோ, யானே?- ஞாங்கர்க் |
||
கடுஞ் சுரை நல் ஆன் நடுங்கு தலைக் குழவி |
||
தாய் காண் விருப்பின் அன்ன, |
||
சாஅய் நோக்கினள்-மாஅயோளே, |
உரை | |
கழற்றெதிர்மறை. - சிறைக்குடி ஆந்தையார் |