முகப்பு |
காமம் தாங்குமதி |
290. நெய்தல் |
'காமம் தாங்குமதி' என்போர்தாம் அஃது |
||
அறியலர்கொல்லோ? அனை மதுகையர் கொல்? |
||
யாம், எம் காதலர்க் காணேம்ஆயின், |
||
செறிதுனி பெருகிய நெஞ்சமொடு, பெருநீர்க் |
||
கல் பொரு சிறு நுரை போல, |
||
மெல்லமெல்ல இல்லாகுதுமே. |
உரை | |
வற்புறுத்தும் தோழிக்குத் தலைமகள் அழிவுற்றுச் சொல்லியது. - கல்பொருசிறுநுரையார். |