முகப்பு |
கைவளை நெகிழ்தலும் |
371. குறிஞ்சி |
கை வளை நெகிழ்தலும் மெய் பசப்பு ஊர்தலும், |
||
மை படு சிலம்பின் ஐவனம் வித்தி |
||
அருவியின் விளைக்கும் நாடனொடு, |
||
மருவேன்-தோழி-அது காமமோ பெரிதே. |
உரை | |
வரைவிடை வற்புறுத்தும் தோழிக்குத் தலைமகள் சொல்லியது. - உறையூர் முதுகூத்தன் |