முகப்பு |
கோடல் எதிர்முகைப் |
62. குறிஞ்சி |
'கோடல், எதிர் முகைப் பசு வீ முல்லை, |
||
நாறு இதழ்க் குவளையொடு இடையிடுபு விரைஇ, |
||
ஐது தொடை மாண்ட கோதை போல, |
||
நறிய நல்லோள் மேனி |
||
முறியினும் வாய்வது; முயங்கற்கும் இனிதே. |
உரை | |
தலைமகன் இடந்தலைப்பாட்டின்கண் கூடலுறும் நெஞ்சிற்குச் சொல்லியது.- சிறைக்குடி ஆந்தையார் |