முகப்பு |
சுடர் சினம் தணிந்து |
195. நெய்தல் |
சுடர் சினம் தணிந்து குன்றம் சேரப் |
||
படர் சுமந்து எழுதரு பையுள் மாலை, |
||
யாண்டு உளர் கொல்லோ வேண்டு வினை முடிநர்? |
||
'இன்னாது, இரங்கும்' என்னார் அன்னோ- |
||
தைவரல் அசைவளி மெய் பாய்ந்து ஊர்தரச் |
||
செய்வுறு பாவை அன்ன என் |
||
மெய் பிறிதாகுதல் அறியாதோரே! |
உரை | |
பிரிவிடைப் பருவ வரவின்கண் கிழத்தி மெலிந்து கூறியது. - தேரதரன். |