முகப்பு |
சேறும் சேறும் என்றலின் |
325. நெய்தல் |
'சேறும் சேறும்' என்றலின், பண்டைத் தம் |
||
மாயச் செலவாச் செத்து, 'மருங்கு அற்று |
||
மன்னிக் கழிக' என்றேனே; அன்னோ! |
||
ஆசு ஆகு எந்தை யாண்டு உளன்கொல்லோ? |
||
கருங் கால் வெண் குருகு மேயும் |
||
பெருங் குளம் ஆயிற்று, என் இடைமுலை நிறைந்தே. |
உரை | |
பிரிவிடை, 'ஆற்றாள்' எனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி மெலிந்து உரைத்தது.- நன்னாகையார் |