தாதின் செய்த தண்பனிப்

48. பாலை
'தாதின் செய்த தண் பனிப் பாவை
காலை வருந்தும் கையாறு ஓம்பு' என,
ஓரை ஆயம் கூறக் கேட்டும்,
இன்ன பண்பின் இனை பெரிது உழக்கும்
நன்னுதல் பசலை நீங்க, அன்ன
நசை ஆகு பண்பின் ஒரு சொல்
இசையாதுகொல்லோ, காதலர் தமக்கே?

உரை

பகற்குறிக்கண் காணும் பொழுதினும் காணப்பொழுது பெரிதாகலின், வேறுபட்ட கிழத்தியது வேறுபாடு கண்டு, தோழி சொல்லியது. - பூங்கணுத்திரையார்