முகப்பு |
தாழ் இருள் துமிய |
270. முல்லை |
தாழ்இருள் துமிய மின்னி, தண்ணென |
||
வீழ் உறை இனிய சிதறி, ஊழின் |
||
கடிப்பு இகு முரசின் முழங்கி, இடித்து இடித்துப் |
||
பெய்க, இனி; வாழியோ, பெரு வான்!-யாமே, |
||
செய்வினை முடித்த செம்மல் உள்ளமொடு |
||
இவளின் மேவினம் ஆகி, குவளைக் |
||
குறுந் தாள் நாள்மலர் நாறும் |
||
நறு மென் கூந்தல் மெல் அணையேமே. |
உரை | |
வினைமுற்றிப் புகுந்த தலைமகன் கிழத்தியோடு உடனிருந்து கூறியது.- பாண்டியன் பன்னாடு தந்தான். |