முகப்பு |
பழூஉப் பல் அன்ன |
180. பாலை |
பழூஉப் பல் அன்ன பரு உகிர்ப் பா அடி |
||
இருங் களிற்று இன நிரை ஏந்தல் வரின், மாய்ந்து, |
||
அறை மடி கரும்பின் கண் இடை அன்ன |
||
பைதல் ஒரு கழை நீடிய சுரன் இறந்து, |
||
எய்தினர் கொல்லோ பொருளே-அல்குல் |
||
அவ் வரி வாடத் துறந்தோர் |
||
வன்பர் ஆகத் தாம் சென்ற நாட்டே? | உரை | |
பிரிவிடை வேறுபட்டாளைத் தோழி வற்புறுத்தியது. - கச்சிப்பேட்டு நன்னாகையார் |