புனவன் துடவைப் ...கிளி குறைத்து

133. குறிஞ்சி
புனவன் துடவைப் பொன்போல் சிறுதினை
கிளி குறைத்து உண்ட கூழை இருவி
பெரும் பெயல் உண்மையினே இலை ஒலித்தாங்கு, என்
உரம் செத்தும் உளெனே-தோழி!-என்
நலம் புதிது உண்ட புலம்பினானே.

உரை

வரைவு நீட்டித்த இடத்துத் தலைமகள் சொல்லியது. - உறையூர் முதுகண்ணன் சாத்தன்