முகப்பு |
கூதாளம் |
282. பாலை |
செவ்வி கொள் வரகின் செஞ் சுவற் கலித்த |
||
கவ்வை நாற்றின் கார் இருள் ஓர் இலை |
||
நவ்வி நாள்மறி கவ்விக் கடன் கழிக்கும் |
||
கார் எதிர் தண் புனம் காணின், கைவளை, |
||
நீர் திகழ் சிலம்பின் ஓராங்கு விரிந்த |
||
வெண் கூதாளத்து அம் தூம்பு புது மலர் |
||
ஆர் கழல்பு உகுவ போல, |
||
சோர்குவஅல்ல என்பர்கொல்-நமரே? |
உரை | |
வினவயிற் பிரிந்த இடத்துத் தோழி கிழத்திக்கு உரைத்தது. - நாகம் போத்தன் |