முகப்பு |
வெட்சி |
209. பாலை |
சுரந்தலைப்பட்ட நெல்லிஅம் பசுங் காய் |
||
மறப் புலிக் குருளை கோள் இடம் கரக்கும் |
||
இறப்பு அருங் குன்றம் இறந்த யாமே, |
||
குறு நடைப் புள் உள்ளலமே, நெறிமுதல் |
||
கடற்றில் கலித்த முடச் சினை வெட்சித் |
||
தளை அவிழ் பல் போது கமழும் |
||
மை இருங் கூந்தல் மடந்தை நட்பே. |
உரை | |
பொருள் முற்றி மறுத்தரும் தலைமகன் தோழிக்கு உரைப்பானாய்க் கிழத்தியைத் தெருட்டியது. - பாலை பாடிய பெருங்கடுங்கோ |