முகப்பு |
பலா (பலவு) |
83. குறிஞ்சி |
அரும் பெறல் அமிழ்தம் ஆர்பதம் ஆகப் |
||
பெரும் பெயர் உலகம் பெறீஇயரோ, அன்னை- |
||
தம் இல் தமது உண்டன்ன சினைதொறும் |
||
தீம் பழம் தூங்கும் பலவின் |
||
ஓங்கு மலை நாடனை, 'வரும்' என்றோளே! |
உரை | |
தலைமகன் வரைந்து எய்துதல் உணர்த்திய செவிலியைத் தோழி வாழ்த்தியது. - வெண்பூதன் |
90. குறிஞ்சி |
எற்றோ வாழி?-தோழி!-முற்றுபு |
||
கறி வளர் அடுக்கத்து இரவில் முழங்கிய |
||
மங்குல் மா மழை வீழ்ந்தென, பொங்கு மயிர்க் |
||
கலை தொட இழுக்கிய பூ நாறு பலவுக் கனி, |
||
வரை இழி அருவி உண்துறைத் தரூஉம் |
||
குன்ற நாடன் கேண்மை |
||
மென் தோள் சாய்த்தும் சால்பு ஈன்றன்றே. |
உரை | |
வரைவு நீட்டித்தவழி ஆற்றாளாகிய தலைமகட்கு, தலைமகன் சிறைப்புறமாகத்தோழி கூறியது. - மதுரை எழுத்தாளன் சேந்தன் பூதன் |
373. குறிஞ்சி |
நிலம் புடைபெயரினும், நீர் திரிந்து பிறழினும், |
||
இலங்கு திரைப் பெருங் கடற்கு எல்லை தோன்றினும், |
||
வெவ் வாய்ப் பெண்டிர் கௌவை அஞ்சிக் |
||
கேடு எவன் உடைத்தோ-தோழி!-நீடு மயிர்க் |
||
கடும் பல் ஊகக் கறை விரல் ஏற்றை |
||
புடைத் தொடுபு உடையூப் பூ நாறு பலவுக்கனி |
||
காந்தள்அம் சிறுகுடிக் கமழும் |
||
ஓங்கு மலை நாடனொடு அமைந்த நம் தொடர்பே? |
உரை | |
அலர் மிக்கவழி ஆற்றாளாகிய தலைமகட்குத் தோழி சொல்லியது.- மதுரைக் கொல்லன் புல்லன் |