முகப்பு |
ஓந்தி |
140. பாலை |
வேதின வெரிநின் ஓதி முது போத்து, |
||
ஆறு செல் மாக்கள் புள் கொள, பொருந்தும் |
||
சுரனே சென்றனர், காதலர்; உரன் அழிந்து, |
||
ஈங்கு யான் அழுங்கிய எவ்வம் |
||
யாங்கு அறிந்தன்று-இவ் அழுங்கல் ஊரே? |
உரை | |
பொருள்வயிற் பிரிந்த இடத்து, 'நீ ஆற்றுகின்றிலை' என்ற தோழிக்குத் தலைமகள் சொல்லியது. - அள்ளூர் நன்முல்லை. |