முகப்பு |
குதிரை (மா) |
74. குறிஞ்சி |
விட்ட குதிரை விசைப்பின் அன்ன, |
||
விசும்பு தோய் பசுங் கழைக் குன்ற நாடன் |
||
யாம் தற் படர்ந்தமை அறியான், தானும் |
||
வேனில் ஆனேறு போலச் |
||
சாயினன் என்ப-நம் மாண் நலம் நயந்தே. |
உரை | |
தோழி தலைமகன் குறை மறாதவாற்றால் கூறியது. - விட்ட குதிரையார் |
250. பாலை |
பரல் அவற் படு நீர் மாந்தி, துணையோடு, |
||
இரலை நல் மான் நெறிமுதல் உகளும் |
||
மாலை வாரா அளவை, கால் இயல் |
||
கடு மாக் கடவுமதி-பாக!-நெடு நீர்ப் |
||
பொரு கயல் முரணிய உண்கண் |
||
தெரி தீம் கிளவி தெருமரல் உயவே. |
உரை | |
தலைமகன் பாகற்கு உரைத்தது. - நாமலார் மகன் இளங்கண்ணன் |
336. குறிஞ்சி |
செறுவர்க்கு உவகை ஆக, தெறுவர, |
||
ஈங்கனம் வருபவோ?-தேம் பாய் துறைவ!- |
||
சிறு நா ஒண் மணி விளரி ஆர்ப்பக் |
||
கடு மா நெடுந் தேர் நேமி போகிய |
||
இருங் கழி நெய்தல் போல, |
||
வருந்தினள், அளியள்-நீ பிரிந்திசினோளே, |
உரை | |
தலைமகன் இரவுக்குறி நயந்தானைத் தோழி சொல்லியது மறுத்தது. - குன்றியன் |
385. குறிஞ்சி |
பலவில் சேர்ந்த பழம் ஆர் இனக் கலை, |
||
சிலை விற் கானவன் செந் தொடை வெரீஇ |
||
செரு உறு குதிரையின் பொங்கி, சாரல் |
||
இரு வெதிர் நீடு அமை தயங்கப் பாயும் |
||
பெரு வரை அடுக்கத்துக் கிழவோன் என்றும் |
||
அன்றை அன்ன நட்பினன்; |
||
புதுவோர்த்து அம்ம, இவ் அழுங்கல் ஊரே. |
உரை | |
வேற்று வரைவு மாற்றியது. - கபிலர் |