முகப்பு |
முதலை |
324. நெய்தல |
கொடுந் தாள் முதலைக் கோள் வல் ஏற்றை |
||
வழி வழக்கு அறுக்கும் கானல்அம் பெருந் துறை, |
||
இன மீன் இருங் கழி நீந்தி, நீ நின் |
||
நயன் உடைமையின் வருதி; இவள் தன் |
||
மடன் உடைமையின் உவக்கும்; யான் அது, |
||
கவை மக நஞ்சு உண்டாஅங்கு, |
||
அஞ்சுவல்-பெரும!-என் நெஞ்சத்தானே. |
உரை | |
செறிப்பு அறிவுறுக்கப்பட்டு, 'இரா வாராவரைவல்' என்றாற்கு, தோழி அது மறுத்து,வரைவு கடாயது. - கவைமகன் |