முகப்பு |
கோழி (கானங்கோழி, சேவல்) |
107. மருதம் |
குவி இணர்த் தோன்றி ஒண் பூ அன்ன |
||
தொகு செந் நெற்றிக் கணம்கொள் சேவல்!- |
||
நள்ளிருள் யாமத்து இல் எலி பார்க்கும் |
||
பிள்ளை வெருகிற்கு அல்குஇரை ஆகி, |
||
கடு நவைப் படீஇயரோ, நீயே-நெடு நீர் |
||
யாணர் ஊரனொடு வதிந்த |
||
ஏம இன் துயில் எடுப்பியோயே! |
உரை | |
பொருள் முற்றி வந்த தலைமகனை உடைய கிழத்தி காமம் மிக்க கழிபடர் கிளவியால் கூறியது. - மதுரைக் கண்ணனார். |
139. மருதம் |
மனை உறை கோழி குறுங் கால் பேடை, |
||
வேலி வெருகினம் மாலை உற்றென, |
||
புகும் இடன் அறியாது தொகுபு உடன் குழீஇய |
||
பைதற் பிள்ளைக் கிளை பயிர்ந்தாஅங்கு |
||
இன்னாது இசைக்கும் அம்பலொடு |
||
வாரல், வாழியர்!-ஐய!-எம் தெருவே. |
உரை | |
வாயில் வேண்டிப் புக்க தலைமகற்குத் தோழி வாயில் மறுத்தது. - ஒக்கூர் மாசாத்தியார். |
157. மருதம் |
'குக்கூ' என்றது கோழி; அதன் எதிர் |
||
துட்கென்றன்று என் தூஉ நெஞ்சம்- |
||
தோள் தோய் காதலர்ப் பிரிக்கும் |
||
வாள் போல் வைகறை வந்தன்றால் எனவே. |
உரை | |
பூப்பு எய்திய தலைமகள் உரைத்தது. - அள்ளூர் நன்முல்லை |
234. முல்லை |
சுடர் செல் வானம் சேப்ப, படர் கூர்ந்து, |
||
எல்லுறு பொழுதின் முல்லை மலரும் |
||
மாலை என்மனார், மயங்கியோரே: |
||
குடுமிக் கோழி நெடு நகர் இயம்பும் |
||
பெரும் புலர் விடியலும் மாலை; |
||
பகலும் மாலை-துணை இலோர்க்கே. |
உரை | |
பருவ வரவின்கண் தோழிக்குக் கிழத்தி உரைத்தது. - மிளைப்பெருங் கந்தன் |
242. முல்லை |
கானங்கோழிக் கவர் குரற் சேவல் |
||
ஒண் பொறி எருத்தில் தண் சிதர் உறைப்பப் |
||
புதல் நீர் வாரும் பூ நாறு புறவில் |
||
சீறூரோளே, மடந்தை; வேறு ஊர் |
||
வேந்து விடு தொழிலொடு செலினும், |
||
சேந்து வரல் அறியாது, செம்மல் தேரே. |
உரை | |
கற்புக் காலத்துக் கடிநகர் சென்ற செவிலித்தாய் நற்றாய்க்குச் சொல்லியது.- குழற்றத்தன் |
305. மருதம் |
கண் தர வந்த காம ஒள் எரி |
||
என்பு உற நலியினும், அவரொடு பேணிச் |
||
சென்று, நாம் முயங்கற்கு அருங் காட்சியமே |
||
வந்து அஞர் களைதலை அவர் ஆற்றலரே; |
||
உய்த்தனர் விடாஅர் பிரித்து இடை களையார் |
||
குப்பைக் கோழித் தனிப் போர் போல, |
||
விளிவாங்கு விளியின் அல்லது, |
||
களைவோர் இலை-யான் உற்ற நோயே. |
உரை | |
காப்பு மிகுதிக்கண், தோழி அறத்தோடு நிற்பாளாக, தனது ஆற்றாமை தோன்றத் தலைமகள் தன்னுள்ளே கூறியது. - குப்பைக் கோழியார். |