முகப்பு |
புறா (புறவு) |
79. பாலை |
கான யானை தோல் நயந்து உண்ட |
||
பொரிதாள் ஓமை வளி பொரு நெடுஞ் சினை |
||
அலங்கல் உலவை ஏறி, ஒய்யெனப் |
||
புலம்பு தரு குரல புறவுப் பெடை பயிரும் |
||
அத்தம் நண்ணிய அம் குடிச் சீறூர்ச் |
||
சேர்ந்தனர்கொல்லோ தாமே-யாம் தமக்கு |
||
ஒல்லேம் என்ற தப்பற்குச் |
||
சொல்லாது ஏகல் வல்லுவோரே. |
உரை | |
பொருள்வயிற் பிரிந்த தலைமகனை நினைந்த தலைமகள் தோழிக்குச் சொல்லியது.- குடவாயிற் கீரனக்கன் |
174. பாலை |
பெயல் மழை துறந்த புலம்பு உறு கடத்துக் |
||
கவை முடக் கள்ளிக் காய் விடு கடு நொடி |
||
துதை மென் தூவித் துணைப் புறவு இரிக்கும் |
||
அத்தம் அரிய என்னார், நத்துறந்து, |
||
பொருள்வயிற் பிரிவார்ஆயின், இவ் உலகத்துப் |
||
பொருளே மன்ற பொருளே; |
||
அருளே மன்ற ஆரும் இல்லதுவே. |
உரை | |
பிரிவு உணர்த்திய தோழிக்குத் தலைமகள் சொல்லியது. - வெண்பூதி |
274. பாலை |
புறவுப் புறத்தன்ன புன் கால் உகாஅத்து |
||
இறவுச் சினை அன்ன நளி கனி உதிர, |
||
விடு கணை வில்லொடு பற்றி, கோடு இவர்பு, |
||
வருநர்ப் பார்க்கும் வன்கண் ஆடவர் |
||
நீர் நசை வேட்கையின் நார் மென்று தணியும் |
||
இன்னாக் கானமும், இனிய-பொன்னொடு |
||
மணி மிடை அல்குல் மடந்தை |
||
அணி முலை ஆகம் முயங்கினம் செலினே. |
உரை | |
பொருள் வலித்த நெஞ்சிற்குக் கிழவன் உரைத்தது. - உருத்திரன் |
285. பாலை |
வைகா வைகல் வைகவும் வாரார்; |
||
எல்லா எல்லை எல்லவும் தோன்றார்; |
||
யாண்டு உளர்கொல்லோ?-தோழி!-ஈண்டு இவர் |
||
சொல்லிய பருவமோ இதுவே; பல் ஊழ் |
||
புன் புறப் பெடையொடு பயிரி, இன் புறவு |
||
இமைக்கண் ஏது ஆகின்றோ!-ஞெமைத் தலை |
||
ஊன் நசைஇப் பருந்து இருந்து உகக்கும் |
||
வான் உயர் பிறங்கல் மலை இறந்தோரே. |
உரை | |
பருவங் கண்டு வேறுபட்ட இடத்து, வற்புறுத்தும் தோழிக்கு, வன்புறை எதிரழிந்து,தலைமகள் சொல்லியது. - பூதத் தேவன் |