முகப்பு |
வாவல் |
172. நெய்தல் |
தாஅவல் அஞ்சிறை நொப் பறை வாவல் |
||
பழுமரம் படரும் பையுள் மாலை, |
||
எமியம் ஆக ஈங்குத் துறந்தோர் |
||
தமியர் ஆக இனியர்கொல்லோ? |
||
ஏழ் ஊர்ப் பொது வினைக்கு ஓர் ஊர் யாத்த |
||
உலை வாங்கு மிதி தோல் போலத் |
||
தலைவரம்பு அறியாது வருந்தும், என் நெஞ்சே. |
உரை | |
வரைவிடை 'ஆற்றாள்' எனக் கவன்ற தோழிக்குத் தலைமகள் கூறியது.- கச்சிப்பேட்டு நன்னாகையார் |