முகப்பு |
வெந்நீர் சேமச் செப்பில் பாதுகாக்கப்பட்டது.
|
277. பாலை |
ஆசு இல் தெருவின் ஆசு இல் வியன் கடை, |
||
செந்நெல் அமலை வெண்மை வெள் இழுது |
||
ஓர் இல் பிச்சை ஆர மாந்தி, |
||
அற்சிர வெய்ய வெப்பத் தண்ணீர் |
||
சேமச் செப்பில் பெறீஇயரோ, நீயே- |
||
'மின்னிடை நடுங்கும் கடைப் பெயல் வாடை, |
||
எக் கால் வருவது?' என்றி; |
||
அக் கால் வருவர், எம் காதலோரே. |
உரை |
தலைமகன் பிரிந்தவழி, அவன் குறித்த பருவ வரவு தோழி அறிவரைக் கண்டு வினாவியது. - ஓரிற் பிச்சையார் |