குறுந்தொகை |
vii |
மூன்றாம் பதிப்பின் முகவுரை
|
இந்நூலின் முதற் பதிப்பு என்
பாட்டனாராகிய டாக்டர் ஐயரவர்களால் 1937-ஆம் ஆண்டிலும். இரண்டாம் பதிப்பு 1947 - ஆம்
ஆண்டில் என் தந்தையாராகிய ஸ்ரீ கலியாண சுந்தரையரவர்களாலும் வெளியிடப் பெற்றன.
|
அவ்விரண்டு பதிப்புக்களுக்குப் பின்பு
செய்து வந்த ஆராய்ச்சிகளால் இந்தப்பதிப்பு பல வகைகளில் திருத்தமடைந்திருக்கிறது.
|
காகிதப் பஞ்சம் கருதி இரண்டாம்
பதிப்பில் சுருக்கமாக வெளியிடப் பெற்ற நூல் ஆராய்ச்சி இந்தப்பதிப்பில்
முதற்பதிப்பில் உள்ளதைப் போல விரிவாகச் சேர்க்கப் பெற்றது.
|
இப்பதிப்பு, திருத்தமாக வெளி வருவதற்கு
வழக்கம்போல, ஐயரவர்களுடைய தலைசிறந்த மாணவரும், சென்னைக் கிறிஸ்துவக் கலாசாலைத்
தமிழாசிரியருமான வித்வான் வி.மு. சுப்பிரமணிய ஐயரவர்கள் M.A பெரிதும்
உதவி புரிந்தமைக்கு நன்றி பாராட்டுகிறேன். ஸ்ரீ வித்வான்
S, பாலசாரநாதன் அவர்கள் ஒப்புநோக்குதல் முதலிய
பணிகளை உடனிருந்து செய்தார்கள்.
|
சென்னை -5
17-04-55
|
இங்ஙனம்
க.சுப்பிரமணியன்
|