1.
|
இருங்கண்
யானையொ டருங்கலந் துறுத்துப்
பணிந்துவழி மொழித லல்லது பகைவர்
வணங்கா ராதல் யாவதோ மற்றே
உருமுடன்று சிலைத்தலின் விசும்பதிர்ந் தாங்குக் |
5
|
கண்ணதிர்பு
முழங்குங் கடுங்குரன் முரசமொடு
கால்கிளர்ந் தன்ன வூர்திக் கான்முளை
எரிநிகழ்ந் தன்ன நிறையருஞ் சீற்றத்து
நளியிரும் பரப்பின் மாக்கடன் முன்னி
நீர்துனைந் தன்ன செலவின் |
10
|
நிலந்திரைப்
பன்ன தானையோய் நினக்கே. |
[புறத்திரட்டு,
பகைவயிற்சேறல், 8; தொல். புறத். 6,
இளம். 8; ந. மேற். அடி, 1: சீவக.
339, ந. மேற்.]
|