| 
  
 | 2. 
 
 
 
 | இலங்கு 
 தொடி மருப்பிற் கடாஅம் வார்ந்து நிலம்புடையூ வெழுதரும் வலம்படு குஞ்சரம்
 எரியவிழ்ந் தன்ன விரியுளை சூட்டிக்
 கால்கிளர்ந் தன்ன கடுஞ்செல லிவுளி
 |   
 | 5 
 
 
 
 
 | கோன்முனைக் 
 கொடியினம் விரவா வல்லோ டூன்வினை கடுக்குந் தோன்றல பெரிதெழுந்
 தருவியி னொலிக்கும் வரிபுனை நெடுந்தேர்
 கண்வேட் டனவே முரசங் கண்ணுற்றுக்
 கதித்தெழு மாதிரங் கல்லென வொலிப்பக்
 |   
 | 10 
 
 
 
 
 | கறங்கிசை 
 வயிரொடு வலம்புரி யார்ப்ப நெடுமதி னிரைஞாயிற்
 கடிமிளைக் குண்டுகிடங்கின்
 மீப்புடை யாரரண் காப்புடைத் தேஎம்
 நெஞ்சுபுக லழிந்து நிலைதளர் பொரீஇ
 |   
 | 15 
 
 | ஒல்லா 
 மன்னர் நடுங்க நல்ல மன்றவிவண் வீங்கிய செலவே.
 |  
     [தொல். 
 புறத். 12, 25, ந. மேற்]  
  1முதற்பத்தையோ 
 பத்தாம் பத்தையோ சார்ந்த இவை
 தொல்காப்பிய உரைகளாலும் புறத்திரட்டாலும் தெரிய வந்தனவாகும்.
 |