பதிற்றுப் பத்துத் திரட்டு

1


இருங் கண் யானையொடு அருங் கலம் தெறுத்து,

பணிந்து, வழிமொழிதல் அல்லது, பகைவர்

வணங்கார் ஆதல் யாவதோ மற்றே-

உரும் உடன்று சிலைத்தலின் விசும்பு அதிர்ந்தாங்குக்

கண் அதிர்பு முழங்கும் கடுங் குரல் முரசமொடு,   

5

கால் கிளர்ந்தன்ன ஊர்தி, கால் முளை

எரி நிகழ்ந்தன்ன நிறை அருஞ் சீற்றத்து,

நளி இரும் பரப்பின் மாக் கடல் முன்னி

நீர்துனைந்தன்ன செலவின்,

நிலம் திரைப்பன்ன தானையோய்! நினக்கே?   

10


[புறத் திரட்டு, பகைவயிற் சேறல், 8. தொல். புறத்திணை. சூ. 6, இளம்பூரணர்

மேற்கோள்; சூ. 8, நச்சினார்க்கினியர் மேற்கோள்]

உரை



முகப்பு  
மேல்