21. செவ்வேள் |
| |
ஊர்ந்ததை எரி புரை ஓடை இடை இமைக்கும் சென்னி, |
|
பொரு சமம் கடந்த புகழ் சால், வேழம். |
|
தொட்டதை தைப்பு அமை சருமத்தின், தாள் இயை தாமரை |
|
துப்பு அமை துவர் நீர்த் துறை மறை அழுத்திய, |
|
5 |
வெரிநத் தோலொடு, முழு மயிர் மிடைந்த, |
வரி மலி அர உரி வள்பு கண்டன்ன, |
|
புரி மென் பீலிப் போழ் புனை அடையல். |
|
கையதை கொள்ளாத் தெவ்வர் கொள் மா முதல் தடிந்து, |
|
புள்ளொடு பெயரிய பொருப்புப் புடை திறந்த வேல்; |
|
10 |
பூண்டதை சுருளுடை வள்ளி இடை இடுபு இழைத்த |
உருள் இணர்க் கடம்பின் ஒன்றுபடு கமழ் தார். |
|
அமர்ந்ததை புரையோர் நாவில் புகழ் நலம் முற்றி, |
|
நிரை ஏழ் அடுக்கிய நீள் இலைப் பாலை |
|
அரை வரை மேகலை, அணி நீர்ச் சூழி, |
|
15 |
தரை விசும்பு உகந்த தண் பரங்குன்றம். |
'குன்றத்து அடி உறை இயைக!' எனப் பரவுதும் |
|
வென்றிக் கொடி அணி செல்வ! நிற் தொழுது. |
|
| |
சுடு பொன் ஞெகிழத்து முத்து அரி சென்று ஆர்ப்ப, |
|
துடியின் அடி பெயர்த்து, தோள் அசைத்துத் தூக்கி, |
|
20 |
அடு நறா மகிழ் தட்ப ஆடுவாள் தகைமையின், |
நுனை இலங்கு எஃகெனச் சிவந்த நோக்கமொடு |
|
துணை அணை கேள்வனைத் துனிப்பவள் நிலையும்; |
|
நிழல் காண் மண்டிலம் நோக்கி, |
|
அழல் புனை அவிர் இழை திருத்துவாள் குறிப்பும்; |
|
25 |
பொதிர்த்த முலையிடைப் பூசிச் சந்தனம் |
உதிர்த்து, பின் உற ஊட்டுவாள் விருப்பும்; |
|
பல் ஊழ் இவை இவை நினைப்பின், வல்லோன் |
|
ஓவத்து எழுது எழில் போலும் மா தடிந் |
|
திட்டோய்! நின் குன்றின்மிசை. |
|
| |
30 |
மிசை படு சாந்தாற்றி போல, எழிலி |
இசை படு பக்கம், இரு பாலும் கோலி, |
|
விடு பொறி மஞ்ஞை பெயர்பு உடன் ஆட; |
|
விரல் செறி தூம்பின் விடு துளைக்கு ஏற்ப, |
|
முரல் குரற் தும்பி அவிழ் மலர் ஊத; |
|
35 |
யாணர் வண்டினம் யாழ் இசை பிறக்க; |
பாணி முழவு இசை அருவி நீர் ததும்ப; |
|
ஒருங்கு பரந்தவை எல்லாம் ஒலிக்கும் |
|
இரங்கு முரசினான் குன்று. |
|
| |
தாழ் நீர் இமிழ் சுனை நாப்பண் குளித்து, அவண் |
|
40 |
மீ நீர் நிவந்த விறலிழை, 'கேள்வனை |
வேய் நீர் அழுந்து தன் கையின் விடுக' என, |
|
பூ நீர் பெய் வட்டம் எறிய, புணை பெறாது |
|
அரு நிலை நீரின் அவள் துயர் கண்டு, |
|
கொழுநன் மகிழ் தூங்கி, கொய் பூம் புனல் வீழ்ந்து, |
|
45 |
தழுவும் தகை வகைத்து தண் பரங்குன்று. |
| |
வண்டு ஆர் பிறங்கல் மைந்தர் நீவிய |
|
தண் கமழ் சாந்தம் தைஇய வளியும், |
|
கயல் புரை கண்ணியர் கமழ் துகள் உதிர்த்த |
|
புயல் புரை கதுப்பகம் உளரிய வளியும், |
|
50 |
உருள் இணர்க் கடம்பின் நெடுவேட்கு எடுத்த |
முருகு கமழ் புகை நுழைந்த வளியும், |
|
அசும்பும் அருவி அரு விடர்ப் பரந்த |
|
பசும் பூண் சேஎய்! நின் குன்றம் நன்கு உடைத்து. |
|
| |
கண் ஒளிர் திகழ் அடர், இடுசுடர் படர் கொடி மின்னுப் போல் |
|
55 |
ஒண் நகை தகை வகை நெறிபெற இடைஇடை இழைத்து யாத்த |
செண்ணிகைக் கோதை கதுப்போடு இயல, |
|
மணி மருள் தேன் மகிழ் தட்ப, ஒல்கிப் |
|
பிணி நெகிழப் பைந் துகில், நோக்கம் சிவப்பு ஊர, |
|
பூங் கொடி போல நுடங்குவாள், ஆங்குத் தன் |
|
60 |
சீர்தகு கேள்வன் உருட்டும் துடிச் சீரான், |
கோடு அணிந்த முத்து ஆரம் ஒல்க ஒசிபவள் ஏர் |
|
ஆடை அசைய, அணி அசைய, தான் அசையும் |
|
வாடை உளர் கொம்பர் போன்ம். |
|
வாளி புரள்பவை போலும், துடிச் சீர்க்குத் |
|
65 |
தோள் ஊழ் பெயர்ப்பவள் கண். |
| |
மாறு அமர் அட்டவை மற வேல் பெயர்ப்பவை; |
|
ஆறு இரு தோளவை; அறு முகம் விரித்தவை; |
|
நன்று அமர் ஆயமோடு ஒருங்கு, 'நின் அடி உறை |
|
இன்று போல் இயைக!' எனப் பரவுதும் |
|
70 |
ஒன்றார்த் தேய்த்த செல்வ! நிற் தொழுதே. |
கடவுள் வாழ்த்து நல்லச்சுதனார் பாட்டு கண்ணகனார் இசை பண் காந்தாரம் |