முகப்பு | தொடக்கம் |
நல் வழுதியார் |
12.
வையை
|
உரை |
|
|
வளி பொரு மின்னொடு வான் இருள்
பரப்பி,
|
|
விளிவு இன்று, கிளையொடு
மேல் மலை
முற்றி,
|
|
தளி பொழி சாரல் ததர்
மலர் தாஅய்;
|
|
ஒளி திகழ் உத்தி உருகெழு
நாகம்,
|
|
5 | அகரு, வழை, ஞெமை, ஆரம், இனைய;
|
தகரமும், ஞாழலும், தாரமும்,
தாங்கி,
|
|
நளி கடல் முன்னியது போலும்,
தீம் நீர்
|
|
வளி வரல் வையை வரவு.
|
|
|
|
'வந்து மதுரை மதில் பொரூஉம்,
வான் மலர் தாஅய்,
|
|
10 | அம் தண் புனல் வையை யாறு'
எனக் கேட்டு,
|
மின் அவிர் ஒளி இழை வேயுமோரும்,
|
|
பொன் அடர்ப் பூம் புனை
திருத்துவோரும்,
|
|
அகில்கெழு சாந்தம் மாற்றி
ஆற்றப்
|
|
புகைகெழு சாந்தம் பூசுவோரும்,
|
|
15 | கார் கொள் கூந்தல் கதுப்பு
அமைப்போரும்,
|
வேர் பிணி பல் மலர் வேயுமோரும்,
|
|
புட்டகம் பொருந்துவ புனைகுவோரும்,
|
|
கட்டிய கயில் அணி காழ்
கொள்வோரும்;
|
|
வாச நறு நெய் ஆடி, வான் துகள்
|
|
20 | மாசு அறக் கண்ணடி வயக்கி,
வண்ணமும்
|
தேசும் ஒளியும் திகழ நோக்கி,
|
|
வாச மணத் துவர் வாய்க்
கொள்வோரும்;
|
|
இடு புணர் வளையொடு தொடு
தோள்வளையர்,
|
|
கட்டு வடக் கழலினர், மட்டு
மாலையர்,
|
|
25 | ஓசனை கமழும் வாச மேனியர்,
|
மட மா மிசையோர்,
|
|
பிடிமேல் அன்னப் பெரும் படை
அனையோர்
|
|
|
|
கடு மா கடவுவோரும், களிறுமேல்
கொள்வோரும்,
|
|
வடி மணி நெடுந் தேர் மா முள்
பாய்க்குநரும்,
|
|
30 | விரைபு விரைபு மிகை மிகை
ஈண்டி,
|
ஆடல் தலைத்தலை சிறப்ப,
கூடல்
|
|
உரைதர வந்தன்று, வையை
நீர்;
வையைக்
|
|
கரை தர வந்தன்று, காண்பவர்
ஈட்டம்;
|
|
நிவந்தது, நீத்தம் கரைமேலா;
நீத்தம்
|
|
35 | கவர்ந்தது போலும், காண்பவர்
காதல்.
|
|
|
முன் துறை நிறை அணி நின்றவர்
மொழி மொழி
|
|
ஒன்று அல, பலபல உடன் எழுந்தன்று;
அவை
|
|
எல்லாம் தெரியக் கேட்குநர்
யார்? அவை
|
|
கில்லா; கேள்வி கேட்டன சிலசில:
|
|
40 | ஒத்த குழலின் ஒலி எழ; முழவு இமிழ்,
|
மத்தரி, தடாரி, தண்ணுமை, மகுளி,
|
|
ஒத்து அளந்து; சீர் தூக்கி; ஒருவர்
பிற்படார்;
|
|
நித்தம் திகழும் நேர் இறை
முன்கையால்
|
|
அத் தக அரிவையர் அளத்தல்
காண்மின்.
|
|
|
|
45 | 'நாணாள்கொல் தோழி! "நயன்
இல் பரத்தையின்
|
தோள் நலம் உண்டு, துறந்தான்"
என, ஒருத்தி
|
|
யாணர் மலி புனல் நீத்தத்து இரும்
பிடி
|
|
சேண வெரிநின் சிறந்தானோடு
ஏறினாள்,
|
|
நாணுக் குறைவு இலள்; நங்கை மற்று?'
என்மரும்,
|
|
50 | 'கோட்டியுள் கொம்பர் குவி முலை
நோக்குவோன்
|
ஓட்டை மனவன்; உரம் இலி'
என்மரும்,
|
|
'சொரிந்ததூஉம் சொற்றதூஉம்
பற்றாள்; நிறம் திரிந்தாள்;
|
|
நெஞ்சத்தை நீத்தாள், நெறி
செல்வான் பின் நிறை
|
|
அஞ்சிக் கழியாமோ, அன்பு
உற்றால்?' என்மரும்,
|
|
55 | 'பூண் ஆரம் நோக்கிப் புணர் முலை
பார்த்தான், உவன்.
|
நாணாள் அவனை, இந் நாரிகை'
என்மரும்
|
|
|
|
அமிர்து அன நோக்கத்து அணங்கு
ஒருத்தி பார்ப்ப,
|
|
கமழ் கோதை கோலாப் புடைத்து,
தன் மார்பில்
|
|
இழையினைக் கை யாத்து,
இறுகிறுக்கி வாங்கி,
|
|
60 | 'பிழையினை' என்ன, பிழை ஒன்றும்
காணான்,
|
தொழுது பிழை கேட்கும் தூயவனைக்
காண்மின்.
|
|
'பார்த்தாள், ஒருத்தி நினை' என,
'பார்த்தவளைப்
|
|
பொய்ச் சூளாள் என்பது அறியேன்,
யான்' என்று இரந்து,
|
|
மெய்ச் சூள் உறுவானை, மெல்இயல்,
'பொய்ச் சூள்' என்று,
|
|
65 | ஒல்லுவ சொல்லாது, உரை வழுவச்
சொல்ல;
|
உறைத்தும் செறுத்தும்
உணர்த்துவானைப்
|
|
புல்லாது ஊடிப் புலந்து நின்றவள்
|
|
பூ எழில் வண்ண நீர் பூரித்த வட்டு
எறிய,
|
|
வேல் எழில் உண்கண் எறி
நோக்கம் பட்ட புண்
|
|
70 | பாய் குருதி சோர, பகை இன்று உளம்
சோர,
|
நில்லாது நீங்கி நிலம் சோர;
அல்லாந்து
|
|
மல் ஆர் அகலம் வடு அஞ்சி,
மம்மர் கூர்ந்து,
|
|
எல்லாத் துனியும் இறப்ப, தன்
காதலன்
|
|
நல் ஏர் எழில் ஆகம்
சேர்வித்தல் எஞ்ஞான்றும்
|
|
75 | வல்லதால், வையைப் புனல்.
|
என ஆங்கு
|
|
மல்லிகை, மௌவல், மணம் கமழ்
சண்பகம்,
|
|
அல்லி, கழுநீர், அரவிந்தம்,
ஆம்பல்,
|
|
குல்லை, வகுளம், குருக்கத்தி,
பாதிரி,
|
|
80 | நல் இணர் நாகம், நறவம்,
சுரபுன்னை,
|
எல்லாம் கமழும் இரு சார் கரை
கலிழ;
|
|
தேறித் தெளிந்து, செறி இருள்
மால் மாலை;
|
|
பாறைப் பரப்பில் பரந்த சிறை
நின்று;
|
|
துறக்கத்து எழிலைத் தன் நீர்
நிழல் காட்டும்:
|
|
85 | கார் அடு காலை, கலிழ் செங்
குருதித்தே
|
போர் அடு தானையான் யாறு.
|
சுடு நீர் வினைக் குழையின் ஞாலச்
சிவந்த
| கடி மலர்ப் பிண்டி தன் காதில்
செரீஇ,
| விடு மலர்ப் பூங் கொடி போல
நுடங்கி,
90
|
அடிமேல் அடிமேல் ஒதுங்கி, தொடி
முன்கைக்
| காரிகை ஆகத் தன் கண்ணி
திருத்தினாள்,
| நேர் இறை முன்கை நல்லவள்; கேள்
காண்மின்.
|
| துகில் சேர் மலர் போல், மணி
நீர் நிறைந்தன்று;
| 'புனல்' என, மூதூர் மலிந்தன்று,
அவர் உரை;
95
|
உரையின் உயர்ந்தன்று, கவின்.
| போர் ஏற்றன்று, நவின்று; தகரம்
| மார்பு அழி சாந்தின் மணல் அளறு
பட்டன்று;
| துகில் பொசி புனலின், கரை கார்
ஏற்றன்று;
| விசும்பு கடி விட்டன்று, விழவுப்
புனல் ஆங்க.
|
100
|
இன்பமும், கவினும், அழுங்கல்
மூதூர்,
| நன்பல நன்பல நன்பல வையை!
| நின் புகழ் கொள்ளாது, இம் மலர்
தலை உலகே.
|