|
"புவ்வத் தாமரை புரையுங் கண்ணன்
வௌவற் காரிருள் மயங்குமணி மேனியன்
எவ்வயின் உலகத்தும் தோன்றி அவ்வயின்
மன்பது மறுக்கத் துன்பங் களைவோன்
அன்பது மேஎ."
|
இருந்தான்" என்றருளிச் செய்யும் இத் திருப்பாடலை
எத்துணைமுறை ஓதினும் எளியேமாகிய எம்முள்ளம் உருகி உருகி
ஒழுகுவதனை அனுபவத்தால் யாம் உணர்கின்றேம். இன்னும்
இறையன்புடைய திருவுடையோர் இப் பாடலை ஓதுங்கால் எய்தும்
இன்பநிலை எற்றோ!
|
இப் பாடலின் அருமையை உணர்ந்துணர்ந்து சுவைத்து இப்
பாடலிலேயே திருமாலைக் கண்ட நம்மாழ்வார், இப் பாடலிற் பயின்ற
சொல்லையே பொன்போற் போற்றி மகிழ்வதனைக் கேண்மின்.
|
பரிபாடலில் "திருமாலிருஞ் சோலைமலையை நினைமின் மாந்தீர்!
தெய்வம் பேணித் திசைதொழுதனிர் சென்மின்" என்றார்
இளம்பெருவழுதியார். இனி நம்மாழ்வார், "திருமாலிருஞ் சோலைமலை
என்றேன்; என்னத் திருமால் வந்து என் நெஞ்சு நிறையப் புகுந்தான்.
தென்னன் திருமாலிருஞ்சோலைத்திசை கைகூப்பிச் சேர்ந்த யான்
இன்னும் போவேனே கொலோ எனகொல அம்மான் திருவருளே" என்று
திருவாய்மலர்ந்தருளினார். இவ்வாற்றால் இப்பரிபாடல் பிற்காலத்தே
தோன்றிய வைணவ சைவசமயத் தெய்வ நூல்களுக்கெல்லாம் முதலாக
நிற்றலை இன்னும் பற்பல ஒப்புமைகளாலே விளக்கக்கூடும் எனினும்
விரிவஞ்சி அமைகின்றாம்.
|
இனி, சங்க காலத்தே தோன்றிப் பின்னர்ச் சான்றோராற்
றொகுக்கப்பட்ட தொகைநூல்கள் எட்டனுள்ளும் இப் பரிபாடல்
இறையியல்பு உணர்த்துமாற்றால் மிகமிகச் சிறந்ததொரு நூலாகும்
என்பது புனைந்துரையன்று. இப் பரிபாடல் தோன்றிய காலத்தும்,
அதனைத் தொடர்ந்து நிகழ்ந்த காலத்தும் தமிழ்ச் சான்றோர்உள்ளம்,
இக் கடவுள் வழிபாட்டின்கண்மிக்குச் சென்ற காரணத்தாலே
இறைப்பொருளுக்குப் பல்வேறு வடிவங்களும் வரலாறும் கற்பனைசெய்து
வழங்கிவந்த வடமொழிப் புராணக் கதைகளையும் பிறவற்றையும்
தம்முடையனவாகவே மேற்கொண்டுவிட்டனர். அதனால்
இப் பரிபாடலின்கண் புராணக்கதைகள் பெருவரவினவாக வந்து
விரவியிருத்தலைக் காண்கின்றோம்; மாந்தர்க்கு நலந்தரும் எப்பொருளும்
மேற்கொள்ளற்பாலனவே யாகும்; உருவமும் வரலாறும் இல்லாத |