| 
 
 
 
 |  | உரைச்சிறப்புப்பாயிரம் | 965 |  | 
 |  
 
	
		| தொல்காப் பியத்திற் றொகுத்த பொருளனைத்து 1மெல்லார்க்கு மொப்ப வினிதுரைத்தான் - சொல்லார்
 2மதுரைநச்சி னார்க்கினியன் மாமறையோன் கல்விக்
 கதிரின் சுடரெறிப்பக் கண்டு.
 |  
	
		| பச்சைமா லனைய மேகம் பௌவநீர் பருகிக் கான்ற வெச்சினாற் றிசையு முண்ணு  3மமிழ்தென வெழுநா வெச்சின்
 மெச்சிநா ணாளும் விண்ணோர்  4மிசைகுவர் வேத போத
 5னச்சினார்க் கினிய னெச்சி னறுந்தமிழ் நுகர்வர் நல்லோர்.
 |  6கலித்தொகைக்குஆசிரியன் பாரத்துவாசி நச்சினார்க்கினியன் செய்த
 உரை முற்றும்.
 
 (பிரதிபேதம்) 1எல்லார்க்கு மேற்பவினிது, 2மதுரா புரியினியான் மாமறையோ னின்பக், கதிரார் சுடர், 3அமிர்தென, 4நுகர்குவர், 5நச்சினார்க் கினியா னாவி னல்லுரை நவில்வர் நல்லோர், 6கலித்தொகைக்கு நச்சினாற்கினியர். |