முகப்பு | தொடக்கம் |
அடி புனை தொடுகழல் |
83 |
அடி புனை தொடுகழல், மை அணல் காளைக்கு என் |
|
தொடி கழித்திடுதல் யான் யாய் அஞ்சுவலே; |
|
அடு தோள் முயங்கல் அவை நாணுவலே; |
|
என் போல் பெரு விதுப்புறுக என்றும் |
|
5 |
ஒரு பாற் படாஅதாகி, |
இரு பாற் பட்ட இம் மையல் ஊரே! |
|
திணை கைக்கிளை; துறை பழிச்சுதல்.
| |
அவனைப் பெருங்கோழிநாய்கன் மகள் நக்கண்ணையார் பாடியது.
|