முகப்பு | தொடக்கம் |
அணங்குடை அவுணர் கணம் |
174 |
அணங்குடை அவுணர் கணம் கொண்டு ஒளித்தென, |
|
சேண் விளங்கு சிறப்பின் ஞாயிறு காணாது, |
|
இருள் கண் கெடுத்த பருதி ஞாலத்து |
|
இடும்பை கொள் பருவரல் தீர, கடுந் திறல் |
|
5 |
அஞ்சன உருவன் தந்து நிறுத்தாங்கு, |
அரசு இழந்திருந்த அல்லல் காலை, |
|
முரசு எழுந்து இரங்கும் முற்றமொடு, கரை பொருது |
|
இரங்கு புனல் நெரிதரு மிகு பெருங் காவிரி |
|
மல்லல் நல் நாட்டு அல்லல் தீர, |
|
10 |
பொய்யா நாவின் கபிலன் பாடிய, |
மை அணி நெடு வரை ஆங்கண், ஒய்யெனச் |
|
செருப் புகல் மறவர் செல்புறம் கண்ட |
|
எள் அறு சிறப்பின் முள்ளூர் மீமிசை, |
|
அரு வழி இருந்த பெரு விறல் வளவன் |
|
15 |
மதி மருள் வெண்குடை காட்டி, அக் குடை |
புதுமையின் நிறுத்த புகழ் மேம்படுந! |
|
விடர்ப் புலி பொறித்த கோட்டை, சுடர்ப் பூண், |
|
சுரும்பு ஆர் கண்ணி, பெரும் பெயர் நும் முன் |
|
ஈண்டுச் செய் நல் வினை ஆண்டுச் சென்று உணீஇயர், |
|
20 |
உயர்ந்தோர் உலகத்துப் பெயர்ந்தனன் ஆகலின், |
ஆறு கொல் மருங்கின் மாதிரம் துழவும் |
|
கவலை நெஞ்சத்து அவலம் தீர, |
|
நீ தோன்றினையே நிரைத் தார் அண்ணல்! |
|
கல் கண் பொடிய, கானம் வெம்ப, |
|
25 |
மல்கு நீர் வரைப்பின் கயம் பல உணங்க, |
கோடை நீடிய பைது அறு காலை, |
|
இரு நிலம் நெளிய ஈண்டி, |
|
உரும் உரறு கருவிய மழை பொழிந்தாங்கே. |
|
திணை வாகை; துறை அரச வாகை.
| |
மலையமான் சோழிய ஏனாதி திருக்கண்ணனை மாறோக்கத்து நப்பசலையார் பாடியது.
|