முகப்பு | தொடக்கம் |
அருவி தாழ்ந்த பெரு வரை போல |
198 |
'அருவி தாழ்ந்த பெரு வரை போல |
|
ஆரமொடு பொலிந்த மார்பில் தண்டா, |
|
கடவுள் சான்ற கற்பின், சேயிழை |
|
மடவோள் பயந்த மணி மருள் அவ் வாய்க் |
|
5 |
கிண்கிணிப் புதல்வர் பொலிக!' என்று ஏத்தி, |
திண் தேர் அண்ணல் நிற் பாராட்டி, |
|
காதல் பெருமையின் கனவினும் அரற்றும் என் |
|
காமர் நெஞ்சம் ஏமாந்து உவப்ப, |
|
ஆல் அமர் கடவுள் அன்ன நின் செல்வம், |
|
10 |
வேல் கெழு குருசில்! கண்டேன்; ஆதலின், |
விடுத்தனென்; வாழ்க, நின் கண்ணி! தொடுத்த |
|
தண் தமிழ் வரைப்பகம் கொண்டி ஆக, |
|
பனித்துக் கூட்டு உண்ணும் தணிப்பு அருங் கடுந் திறல் |
|
நின் ஓரன்ன நின் புதல்வர், என்றும், |
|
15 |
ஒன்னார் வாட அருங் கலம் தந்து, நும் |
பொன்னுடை நெடு நகர் நிறைய வைத்த நின் |
|
முன்னோர் போல்க, இவர் பெருங் கண்ணோட்டம்! |
|
யாண்டும் நாளும் பெருகி, ஈண்டு திரைப் |
|
பெருங் கடல் நீரினும், அக் கடல் மணலினும், |
|
20 |
நீண்டு உயர் வானத்து உறையினும், நன்றும், |
இவர் பெறும் புதல்வர்க் காண்தொறும், நீயும், |
|
புகன்ற செல்வமொடு புகழ் இனிது விளங்கி, |
|
நீடு வாழிய! நெடுந்தகை! யானும் |
|
கேள் இல் சேஎய் நாட்டின், எந்நாளும், |
|
25 |
துளி நசைப் புள்ளின் நின் அளி நசைக்கு இரங்கி, நின் |
அடி நிழல் பழகிய அடியுறை; |
|
கடுமான் மாற! மறவாதீமே. |
|
திணையும் துறையும் அவை.
| |
பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறனை வடம வண்ணக்கன் பேரி சாத்தனார் பாடியது.
|