அளிதோ தானே, பேர் இருங் குன்றே

111
அளிதோ தானே, பேர் இருங் குன்றே!
வேலின் வேறல் வேந்தர்க்கோ அரிதே;
நீலத்து, இணை மலர் புரையும் உண்கண்
கிணை மகட்கு எளிதால், பாடினள் வரினே.

திணையும் துறையும் அவை.
அவனை அவர் பாடியது.