அன்ன ஆக: நின் அருங்

146
அன்ன ஆக: நின் அருங் கல வெறுக்கை
அவை பெறல் வேண்டேம்; அடு போர்ப் பேக!
சீறியாழ் செவ்வழி பண்ணி, நின் வன் புல
நல் நாடு பாட, என்னை நயந்து
5
பரிசில் நல்குவைஆயின், குரிசில்! நீ
நல்காமையின் நைவரச் சாஅய்,
அருந் துயர் உழக்கும் நின் திருந்துஇழை அரிவை
கலி மயில் கலாவம் கால் குவித்தன்ன,
ஒலி மென் கூந்தல் கமழ் புகை கொளீஇ,
10
தண் கமழ் கோதை புனைய,
வண் பரி நெடுந் தேர் பூண்க, நின் மாவே!

திணையும் துறையும் அவை.
அவனை அவள் காரணமாக அரிசில் கிழார் பாடியது.