முகப்பு | தொடக்கம் |
ஆடு நனி மறந்த கோடு |
164 |
ஆடு நனி மறந்த கோடு உயர் அடுப்பின் |
|
ஆம்பி பூப்ப, தேம்பு பசி உழவா, |
|
பாஅல் இன்மையின் தோலொடு திரங்கி, |
|
இல்லி தூர்ந்த பொல்லா வறு முலை |
|
5 |
சுவைத்தொறு அழூஉம் தன் மகத்து முகம் நோக்கி, |
நீரொடு நிறைந்த ஈர் இதழ் மழைக்கண் என் |
|
மனையோள் எவ்வம் நோக்கி, நினைஇ, |
|
நிற் படர்ந்திசினே நல் போர்க் குமண! |
|
என் நிலை அறிந்தனைஆயின், இந் நிலைத் |
|
10 |
தொடுத்தும் கொள்ளாது அமையலென் அடுக்கிய |
பண் அமை நரம்பின் பச்சை நல் யாழ், |
|
மண் அமை முழவின், வயிரியர் |
|
இன்மை தீர்க்கும் குடிப் பிறந்தோயே. |
|
திணை அது; துறை பரிசில் கடாநிலை.
| |
தம்பியால் நாடு கொள்ளப்பட்டுக் காடு பற்றியிருந்த குமணனைப் பெருந்தலைச் சாத்தனார் பாடியது.
|