முகப்பு | தொடக்கம் |
ஆன் முலை அறுத்த |
34 |
'ஆன் முலை அறுத்த அறனிலோர்க்கும், |
|
மாண் இழை மகளிர் கருச் சிதைத்தோர்க்கும், |
|
பார்ப்பார்த் தப்பிய கொடுமையோர்க்கும், |
|
வழுவாய் மருங்கில் கழுவாயும் உள' என, |
|
5 |
'நிலம் புடைபெயர்வது ஆயினும், ஒருவன் |
செய்தி கொன்றோர்க்கு உய்தி இல்' என, |
|
அறம் பாடின்றே ஆயிழை கணவ! |
|
'காலை அந்தியும், மாலை அந்தியும், |
|
புறவுக் கரு அன்ன புன் புல வரகின் |
|
10 |
பால் பெய் புன்கம் தேனொடு மயக்கி, |
குறு முயல் கொழுஞ் சூடு கிழித்த ஒக்கலொடு, |
|
இரத்தி நீடிய அகன் தலை மன்றத்து, |
|
கரப்பு இல் உள்ளமொடு வேண்டு மொழி பயிற்றி, |
|
அமலைக் கொழுஞ் சோறு ஆர்ந்த பாணர்க்கு |
|
15 |
அகலாச் செல்வம் முழுவதும் செய்தோன், |
எம் கோன், வளவன் வாழ்க!' என்று, நின் |
|
பீடு கெழு நோன் தாள் பாடேன் ஆயின், |
|
படுபு அறியலனே, பல் கதிர்ச் செல்வன்; |
|
யானோ தஞ்சம்; பெரும! இவ் உலகத்து, |
|
20 |
சான்றோர் செய்த நன்று உண்டாயின், |
இமயத்து ஈண்டி, இன் குரல் பயிற்றி, |
|
கொண்டல் மா மழை பொழிந்த |
|
நுண் பல் துளியினும் வாழிய, பலவே! |
|
திணை பாடாண் திணை; துறை இயன்மொழி.
| |
சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனை ஆலத்தூர் கிழார் பாடியது.
|