முகப்பு | தொடக்கம் |
இம்மைச் செய்தது மறுமைக்கு |
134 |
'இம்மைச் செய்தது மறுமைக்கு ஆம்' எனும் |
|
அற விலை வணிகன் ஆஅய் அல்லன்; |
|
பிறரும் சான்றோர் சென்ற நெறி என, |
|
ஆங்குப் பட்டன்று, அவன் கைவண்மையே. |
|
திணை அது; துறை இயன்மொழி.
| |
அவனை அவர் பாடியது.
|